தனஸ்ரீக்கு ஜீவனாம்சமாக 60 கோடி கொடுத்தாரா யுவேந்திர சாஹல்!! வெளியான தகவல்..
யுவேந்திர சாஹல் - தனஸ்ரீ
2020 டிசம்பர் 22 ஆம் தேதி யூடியூபர், நடன இயக்குநர் மற்றும் பல் மருத்துவரான தன்ஸ்ரீ வர்மாவை யுவேந்திர சாஹல் திருமணம் செய்து கொண்டார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வந்த தன் மனைவியை 4 ஆண்டுகளுக்கு பின் இன்ஸ்டாகிராமில் இருந்து அன்ஃபாலோ செய்துள்ளார் யுவேந்திர சாஹல்.

யுவேந்திர சாஹல் தன் மனைவி தனஸ்ரீ வர்மாவை சட்ட ரீதியாக பிரிய நீதிமன்றத்தில் ஆஜராகினர். சட்டரீதியான நடைமுறைகள் அனைத்தும் முடிந்த நிலையில் இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜீவனாம்சமாக ரூ. 60 கோடி
இருவருக்கும் இடையே இணக்கம் இல்லாததால் 18 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் பரஸ்பர சம்மத்துடன் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள் சாஹல் - தனஸ்ரீ.
இந்நிலையில் தனஸ்ரீ வர்மா, ஜீவனாம்சமாக ரூ. 60 கோடி கேட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அதில் உண்மையில்லை என்று தனஸ்ரீ வர்மாவின் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.