ரஜினி அப்படி செய்தது உண்மை தான் ஆனால்.. ஐஸ்வர்யா குறித்து தனுஷ் உடைத்த ரகசியம்
தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது படங்களை இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்தும், இயக்கியும் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது.
அதை தொடர்ந்து, தற்போது தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை ஆகிய படங்களை இயக்கி வருகிறார். சினிமாவில் பிஸியாக வலம் வரும் தனுஷ் தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார்.
சமீபத்தில், இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் தனது திருமண வாழ்க்கையை முடித்து கொண்டார். இந்நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இணைந்து முன்பு பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உடைத்த ரகசியம்
அதில், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் தனுஷிடம் காதல் கொண்டேன் படத்திற்காக ரஜினிகாந்த் உங்களை அழைத்து பாராட்டி விட்டு பொண்ணையும் சேர்த்து கொடுத்தாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, " ஆம், தலைவர் என்னை அழைத்து பாராட்டியது உண்மை தான். ஆனால் பொண்ணு அவர் கொடுக்கவில்லை அதுவாவே விழுந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.