விவாகரத்து கிடையாது!! ஒரு வருடம் கழித்து தனுஷ் - ஐஸ்வர்யா சேருவார்கள்!! பயில்வானிடம் உளறிய சுப்ரமணிய சிவா..

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth Bayilvan Ranganathan
By Edward Apr 08, 2023 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து தற்போது ஹாலிவுட் வரை சென்று கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ். கடந்த ஆண்டு 2022 ஜனவரி 17 ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டார்.

இருவரும் என்ன காரணத்திற்காக பிரிந்தனர் என்று பலவிதமான செய்திகள் வெளியானது. மனைவியை பிரிவதற்கு முன் ரஜினிகாந்த் முன்னிலையில் போயஸ் கார்டனில் பல கோடி மதிப்பில் நிலம் ஒன்றினை வாங்கி பூஜை போட்டிருந்தார்.

விவாகரத்து கிடையாது!! ஒரு வருடம் கழித்து தனுஷ் - ஐஸ்வர்யா சேருவார்கள்!! பயில்வானிடம் உளறிய சுப்ரமணிய சிவா.. | Dhanush Aishwarya Return Join Together Bayilvan

அதன்பின் 2 ஆண்டுகள் கழித்து மனைவியை பிரிந்த நிலையில் 150 கோடி செலவில் உருவாகிய அந்த பங்களா வீட்டிற்கு குடும்பத்துடன் குடியேறியிருக்கிறார். இப்படியிருக்கும் போது இருவரும் எப்படியாவது சேர்ந்துவிடுவார்கள் என்று இரு வீட்டாரும் மற்றும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் எதிர்ப்பார்ப்போடு இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், தனுஷுக்கு நெருக்கமாக இருக்கும் இயக்குனர் சுப்ரமணிய சிவா தன்னிடம் கூறிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அப்பாவும் மகளும் பக்கத்தில் இருக்க தான் நினைத்து அந்த நிலத்தை தனுஷ் வாங்கினார்.

பாதி வீட்டினை கட்டும் போது ரஜினி இருந்தார். அதன்பின் தனுஷ் மேலாளர்கள் பார்த்து வந்தனர். பங்களா கட்டி முடித்த போது கிரஹபிரவேசம் நடந்த போது, ரஜினிகாந்த் அண்ணனின் 80வது பிறந்தநாளுக்காக ரஜினியுடன், ஐஸ்வர்யா மற்றும் மகன்கள் சென்றுவிட்டார்கள்.

விவாகரத்து கிடையாது!! ஒரு வருடம் கழித்து தனுஷ் - ஐஸ்வர்யா சேருவார்கள்!! பயில்வானிடம் உளறிய சுப்ரமணிய சிவா.. | Dhanush Aishwarya Return Join Together Bayilvan

அதே நாளில் கிரஹபிரவேசம் நடந்ததால் தான் அவர்களால் வரமுடியவில்லை. அவர்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை, தனியாக வாழப்போகிறோம் என்று தான் கூறினார்களே தவிர விவாரத்துக்கு நோட்டிஸ் இருவரும் கொடுக்கவில்லை.

தேவைப்படும் போது இருவரும் பேசிக்கொள்வதாக சுப்ரமணிய சிவா கூறியதாகவும் கணவர் மனைவிக்கு இடையே இதெல்லாம் சகஜம் தான், தனுஷ் - ஐஸ்வர்யா பிரியபோவதில்லை கண்டிப்பாக சேர்ந்துவிடுவாங்க என்றும் கூறியிருக்கிறாராம்.

இது கணவர் - மனைவிக்கு இடையில் ஒரு ஊடல் தான், ஒரே ஓட்டலில் இருந்து தான் அறிக்கை வெளியிட்டதால் இருவரும் சேர்ந்து வாழ்வார் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.