தனுஷ் பெயரை எடுக்கமாட்டேன்! அப்போ அதெல்லாம் பொய்யா ஐசு..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவை சினிமாவில் நடிக்க அரம்பித்த காலத்தில் காதலித்து கரம்பிடித்தார். திருமணமானது முதல் பல கருத்து வேறுபாடுகள் இருந்தும் 18 ஆண்டுகள் சந்தோஷமாக இருந்தனர்.
ஆனால் திடீரென இருவரும் விவாகரத்து பெற்றதாக அறிவித்தனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அவர்கள் பிரியக்கூடாது என்பதற்காக சமாதானம் செய்து வைத்து வருகிறார்கள். இந்நிலையில் விவாகரத்து என்ற சொல் அந்த அறிக்கையில் பயன்படுத்தாத இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐஸ்வர்யா தனது சமுகவலைத்தள பக்கத்தில் கணவர் தனுஷ் பெயரை இன்னும் எடுக்காமல் இருக்கிறார். இந்தகாலகட்டத்தில் சமுகவலைத்தளங்களில் கணவர் பெயரை எடுத்தால் போது அது விவாகரத்து தான் என்று கதை கட்டுவார்கள். அப்படியிருக்கையில் ஐஸ்வர்யா தனுஷின் பெயரை இன்னும் எடுக்காமல் இருப்பது ஆறுதலை தந்துள்ளது.