என்னய்யா சொல்றீங்க, விவாகரத்து இல்லையா..! தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்தில் திருப்பம்

divorce dhanush rajinikanth kasthuri aiswarya
By Kathick Jan 19, 2022 07:00 PM GMT
Report

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொள்ள போவதாக இரு தினங்களுக்கு முன் அறிவித்திருந்தனர். இவர்களின் விவகாரத்து செய்தி, ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்தது. இந்த விவாகரத்து முடிவை இருவரும் 2 வாரங்களுக்கு முன்பே எடுத்துவிட்டார்களாம்.

கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த விவகாரத்து ஏற்பட்டுள்ளதாம். இருவரின் கருத்து வேறுபாட்டை பற்றி தெரிந்துகொண்ட நடிகர் ரஜினி, இருவரிடமும் தனித்தனியாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளாராம். 2 குழந்தைகளையும் நினைவில் வைத்துக்கொண்டு இறுதி முடிவை எடுங்கள் என்று கூறியுள்ளாராம். ஆனால், ரஜினியின் பேச்சை ஏற்றுக்கொள்ளாமல், இருவரும் விவகாரத்து என்று முடிவை எடுத்துள்ளனர்.

இந்நிலையில், விவாகரத்து முடிவில் தீடீர் திருப்பமாக தனுஷின் தந்தை, இயக்குனர் கஸ்தூரி ராஜா தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், " இருவரும் விவாகரத்து செய்யவில்லை. கணவன் மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுதான். இது வெறும் குடும்ப சண்டை விரைவில் சரியாகிவிடும். விரைவில் நல்ல செய்தி வரும் " என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.