ரஜினியின் போயர்ஸ் கார்டனும் ஒருகாரணமா! வெடிக்கும் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து காரணம்..

divorce dhanush rajinikanth aiswarya Poes Garden போயஸ் கார்டன் dhanush aiswarya
By Edward Feb 04, 2022 11:10 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து தற்போது வரை சினிமாவில் இருக்கும் அதீதி அன்பால் இன்றுவரை நடித்து வருகிறார். இடையில் பல உடல் பிரச்சனை மன பிரச்சனைகளை சந்தித்து சுறுசுறுப்புடன் இருந்து வருகிறார். அதற்கு இடியாக சமீபத்தில் அமைந்தது தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து சம்பவம் தான்.

இருவரும் பிரிவதாக பல மாதங்கள் யோசித்து வந்துள்ளனர். குடும்பத்தினர் ரஜினி உட்பட பலர் அறிவுரை கூறியும் இதை செய்துள்ளது தான் அதிர்ச்சியாக உள்ளது. இந்நிலையில் பல காரணங்கள் பிரிவிற்கு கூறி வந்த நிலையில், ரஜினியின் போயர்ஸ் கார்டன் வீடும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

போயஸ் கார்டனில் தற்போது ரஜினி இருக்கும் வீட்டின் மதிப்பு 35 கோடிக்கு மேல் என்பதால் அதை இளைய மகள் செளந்தர்யாவிற்கு எழுதி கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். மூத்த மகளுக்கு அதேபோல் போயஸ் கார்டனில் நிலம் வாங்கி கொடுத்த ரஜினி, அதை 150 கோடி செலவில் தனுஷ் தற்போது பூஜை போட்டு வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். மேலும் வீடு கட்ட வாஸ்து பார்த்து கொடுத்தும் அதை கண்டுகொள்ளாமல் வீட்டினை கட்டி வந்துள்ளார் தனுஷ்.

இதற்கிடையில் தனுஷிற்கு போயஸ் கார்டன் வீட்டின் மேல் ஒரு ஆசை இருந்துள்ளதாகவும் அது கைமாறிவிட்டதால் சங்கடத்தில் இருந்துள்ளாராம். அது அச்சாணி கொடுத்து பிரச்சனையை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது.