நடிகைகளே இல்லாமல் இரவு பார்ட்டி.. விவாகரத்துக்கு பின் பிளாக் பஸ்டருக்கா நடிகர் தனுஷ் செய்த செயல்..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கோலிவுட்டில் புகழ் பெற்றதை அடுத்து பாலிவுட், ஹாலிவுட் சென்று படங்களில் நடித்து பிரபலமாகிவிட்டார். தற்போது தி கிரே மேன் 2விலும் நடிக்கவுள்ளார் என்று அவரே தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் பாரதிராஜா, தனுஷ், பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் போன்றவர்கள் நடித்த திருச்சிற்றம்பலம் படம் வெளியானது. இயக்குனர் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் இப்படம் வெளியாகி 50 கோடிக்கும் மேல் வசூலித்து பிளாக் பஸ்டர் கொடுத்து வருகிறது.
இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தவரில் அனிருத் இசையும் ஒன்று. தற்போது படம் பிளாக்பஸ்டர் கொடுத்ததால் நடித்த நடிகர்கள், இயக்குனர், படக்குழுக்குவினருக்கு இரவு பார்ட்டி கொடுத்துள்ளார் தனுஷ்.
இந்த பார்ட்டி எந்த நடிகையும் கலந்து கொள்ளவில்லை என்பது தான் பெரிய விசயம். தனுஷ் இதுவரையில் கொடுத்த நிகழ்ச்சிகளில் நடிகைகளுடன் இருப்பது தான் அறிந்த ஒன்று. அப்படியொரு நிலையில் விவாகரத்துக்கு பின் தனுஷ் கொடுத்த நடிகைகள் இல்லா பார்ட்டி இதுதானாம்.


