விஜய் கமல் ரஜினி கிடைக்காத பெருமை! தட்டித்தூக்கிய நடிகர் தனுஷ்..
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இவரெல்லாம் ஒரு நடிகரா என்று ஏசி பேசும் அளவிற்கு தள்ளப்பட்டார் நடிகர் தனுஷ். இதை சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் சக நடிகருடன் பகிர்ந்துள்ளார். இதையெல்லாம் தூக்கிவீசி தன் திறமையால் தற்போது ஹாலிவுட் அளவிற்கு சென்று நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் சில தோல்வி ஆனால் தற்போதோடு படுசூப்பர் ஹிட் டூப்பர் படங்களை தனுஷ் தொடர்ந்து கொடுத்து வருகிறார். தன் நடிப்பு திறமையால் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் முன்னணி டாப் நடிகர்களான ரஜினி, கமல், விஜய், சூர்யாவிற்கு கிடைக்காத ஒரு அங்கீகாரம் தற்போது இணையம் மூலம் ரசிகர்கள் தனுஷை பெருமைப்படுத்தியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் ட்விட்டரில் 10 மில்லியன் ஃபாலோவர்சை கொண்ட பிரபலம் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இவரை தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் கமல் 68 லட்சம் ஃபாலோவர்ஸ்சுடன் இரண்டாவது இடத்திலும், 59 லட்சம் ஃபாலோவர்ஸ்சுடன் ரஜினிகாந்த் 3 ஆவது இடத்திலும், 32 லட்சம் ஃபாலோவார் வைத்திருக்கும் விஜய் 4 ஆவது இடத்திலும் இருந்து வருகிறார்கள்.