விவாகரத்தால் தடுமாறிப்போன வாழ்க்கை! பயத்தில் அவருக்கு போன் செய்த தனுஷ்..
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் சமீபத்தில் 18 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த மனைவி ஐஸ்வர்யா தனுஷை கடந்த ஜனவரி 17ஆம் தேதி பிரியவுள்ளதாக அறிக்கை மூலம் தெரிவித்தார். இதையடுத்து இந்த செய்தி இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.
வேதனையை கண்ணில் காட்டாத தனுஷ் படப்பிடிப்பு வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படி இருந்தாலும் எப்போதும் போலவும் தன்னால் இருக்க முடியவில்லை என புலம்பி வருகிறாராம். தனக்குத்தான ஆறுதல் கூறிக்கொண்டு இருக்கும் தனுஷ் படப்பிடிப்பு தளத்தில் கூட அமைதியாக தான் இருக்கிறாராம்.
இப்படியே போனால் காணாமல் போய்விடுவேன் என்று நினைத்து இயக்குனர் வெற்றிமாறனுக்கு கால் செய்து வரவழைத்துள்ளாராம். வெற்றிமாறன் படம் என்றாலே பல விஷயங்கள் யோசித்து வேலை செய்யத்தோன்றும்.
அந்த காரணம் ஒன்றுமே போதும் அவரை சோகத்தில் இருந்து வெளியே கொண்டு வரகாரணமாக இருக்கும். சூரியை வைத்தும் சூர்யாவைவைத்தும் படங்களை இயக்க திட்டமிட்டுள்ள வெற்றிமாறன் தனுஷிற்காக விறுவிறுப்பாக விரைவில் ஒரு கதையோடு வந்து மாஸ் காட்டவுள்ளாராம்.