எல்லாத்துக்கு இந்தம்மா தான் காரணம்! மனைவி மீது கோபத்தில் சூப்பர் ஸ்டார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 71வயதை எட்டிய ரஜினி இன்னும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அரசியல் வேண்டாம் என்று பல உடல் பிரச்சனையால் முடிவெடுத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவும் அவருக்கு பெரிய மன உளைச்சலை கொடுத்துள்ளது.
தனுஷை பிரிவதற்கு முடிவெடுத்த ஐஸ்வர்யா முன்பே அம்மா லதாவிடம் கூறியிருந்தாராம். இதுபற்றி சூப்பர் ஸ்டாரிடம் லதா கூறியுள்ளார். அதற்கு ரஜினி இது அவர்களுக்கு உள்ள சண்டை இதை பெரிதுப்படுத்தாமல் அவர்களுக்கு அறிவுரை கூறு என்று தெரிவித்துள்ளார்.
18 வருஷமாக ஒன்றாக இருந்து ஏன் பிரியப்போகிறார்கள் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை நீ சமாதானம் செய் என்றும் கூறியிருக்கிறார். ஆனால் இருவரும் பிரிந்த செய்தியை கேட்டு சோகத்தின் உச்சிக்கே சென்றார் ரஜினி.
அப்போது லதா சமாதானம் செய்திருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காது என்று ரஜினி மனைவி லதாவிடம் கோபமாக இருக்கிறாராம். ஆனால் ரஜினிகாந்த் இருவரிடம் பேசி வருவதாகவும் தெரிகிறது.