கோடான கோடி நன்றி!! 11 ஆண்டுகள் கழித்து எமோஷ்னலுடன் ஐஸ்வர்யாவுக்கு தூது விட்ட நடிகர் தனுஷ்..
நடிகர் தனுஷின் கேரியருக்கு மிக முக்கியமான படமாக அமைந்தது 3 படம் தான். தனுஷுக்கு மட்டும் இல்லாமல் படத்தின் இசையமைப்பாளர் அனுரூத், நடிகை ஸ்ருதி ஹாசனுக்கும் ஒரு முக்கிய கேரியர் படமாக அமைந்தது.
இப்படத்தினை தனுஷ் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி சூப்பர் டூப்பர் படமாக்கினார். அப்படத்திற்கு பின் இருவரும் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஆனால் சில கருத்து வேறுபாட்டால் இருவரும் கடந்த 2021ல் பிரிந்து வாழப்போவதாக கூறி ஷாக் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து வாழ்வார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தாலும் தனுஷ் - ஐஸ்வர்யா தங்கள் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் 3 படம் 11 ஆண்டுகள் கழித்து தியேட்டரில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு நடிகர் தனுஷ் அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் எமோஷ்னல் பதிவினை பகிர்ந்துள்ளார். ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதும் நான் எமோஷ்னல் ஆகிவிட்டேன். அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஒருவேலை மனைவி ஐஸ்வர்யாவுக்கு மறைமுகமாக தனுஷ் நன்றி என்று கூறியிருக்கிறாரோ என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்தும் இருவரும் இணைந்து வாழவேண்டும் என்ற கோரிக்கையும் எடுத்து வைத்து வருகிறார்கள்.
“3” Re release response : Emotional , thankful and overwhelmed. A million thanks. ♥️♥️??
— Dhanush (@dhanushkraja) December 2, 2023