இதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது! தனுஷ் இப்படி நடந்து கொண்டாரா?

divorce dhanush rumours tamilactor
By Edward Feb 09, 2022 08:30 AM GMT
Report

சினிமாத்துறையில் பல விமர்சனங்கள் எழுந்தாலும் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் மிகப்பெரிய உயரத்தை எட்டியவர் நடிகர் தனுஷ். படத்தில் நடித்த பல நடிகைகளுடன் கிசுகிசுக்களில் சிக்கியவராக திகழ்ந்தார். சமீபத்தில் 18 வருட கால திருமண வாழ்க்கையில் ரஜினி மகள் ஐஸ்வர்யாவை பிரிந்துள்ளது அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணையப்போவதில்லை என்ற வைராக்கியத்தில் இருந்து வருகிறாராம். இந்நிலையில் தனுஷ் பற்றிய பல கிசுகிசுக்கள் வைரல் வீடியோக்கள் என இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அந்தவகையில், சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் தனுஷின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய சில புகைப்படங்கள் சுச்சி லீக்ஸ் மூலம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விஐபி 2 படத்தின் போது ஒரு பேட்டியில் தொகுப்பாளினி அந்த கிசுகிசு புகைப்படத்தை பற்றி கேட்டுள்ளார்.

படத்தின் பிரமோஷனுக்காக வந்திருக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி கேட்காதீர்கள் என்று கூறி மைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.