4 நடிகர்கள் தூக்கி எறிந்த தேசியவிருது படம்! தனுஷை பார்த்து பொறாமைப்பட்டு புலம்பும் நிலை!
தமிழ் சினிமாவில் இவரெல்லாம் நடிகரா என்று பலரால் கிண்டல் செய்யப்பட்டவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் ஏற்பட்ட பல கஷ்டங்களை தாண்டி தற்போது விருதுகளுக்கு இவர் படம் தான் என்று கூறும் அளவிற்கு வெற்றியை கொடுத்து வருகிறார். அப்படி அவரின் வாழ்க்கையை மாற்றிய இயக்குநரில் முக்கிய பங்காற்றியவர் வெற்றிமாறன்.
பல படங்களில் இணைந்து நடித்த தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணி பல ஹிட் படங்களில் கொடிகட்டியது. அப்படி கடந்த ஆண்டு வெளியான படம் அசுரன். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் படத்தின் கதையை இதற்கு முன்னர் சில முன்னணி நடிகர்கள் நான்கு பேரிடம் கூறியுள்ளாராம் வெற்றிமாறன்.
ஆனால் இதெல்லாம் ஒரு கதையா என்பது போல் அலட்சியமாக நிராகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வயதான கதாபாத்திரத்தில் நடித்தால் என்னுடைய இமேஜ் என்ன ஆகும் என சில நடிகர்கள் நிராகரித்து விட்டார்களாம். இதனை வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த நடிகர்கள் யார் யார் என்பதை மட்டும் கூறாமல் நடந்த சம்பவத்தை மட்டும் கூறியதால் அந்த நான்கு பேர் யார்? என்பது ரசிகர்களுக்கு தெரியாமலேயே போய்விட்டது. அசுரன் படத்தை மிஸ் செய்துவிட்டோமே என்று புலம்பி தள்ளி வருகிறார்களாம் அந்த 4 நடிகர்கள்.