நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா! விவாகரத்துக்கு பின் லீக்கான பட்டியல்..
முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் திகழ்ந்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் காதல் மனைவியும் சூப்பர்ஸ்டார் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை பிரியவுள்ளதாக அறிக்கை வெளியிட்டார். விவாகரத்துக்கு பல காரணங்கள் கூறிய நிலையில் தனுஷ் பற்றி விவரங்களை ஊடகங்களும் ரசிகர்களும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
அப்படி நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு பற்றி விவரம் லீக்காகியுள்ளது. 3 தேசிய விருதுகள், 7 பிலிம் பேர் விருது, 9 விஜய் விருதுகள் என பல விருதுக்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். பாலிவுட்டில் ஆரம்பத்தில் மாத சம்பளமாக 1 கோடி இருந்து தற்போது ஒரு நாளைக்கு 1 கோடியாக வாங்கி வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் 30 கோடிக்கும் மேல் சம்பளமாக ஒரு படத்திற்கு வாங்கி வருகிறார். அடுத்து வரும் 2 வருடங்களுக்கு கமிட்டாகி படங்களால் பிஸியாக இருப்பார் தனுஷ். அப்படிபோக தனுஷ் ரியல் எஸ்ட்டேட் தொழிலை பல மாநிலங்களிலும் செய்து வருகிறார்.
இதைதவிர தயாரிப்பு நிறுவனத்தால் கிடைக்கும் தொகையில் கடனை அடைத்தது போக அதிலிருந்து கிடைக்கும் தொகையை சேர்ந்தால் மொத்தம் சுமார் 490 கோடி அளவில் இருக்கிறதாம்.
மேலும் போயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் வீடு பக்கத்திலேயே 25 கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கி அதில் 150 கோடி செலவில் பங்களா கட்டி வருகிறார் தனுஷ்.
தனுஷ் கார்கள் சேகரிப்பில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ஆடி ஏ8, ஃபோர்டு முஸ்டாங், பென்ட்லி கான்டினென்டல் ஃப்ளையிங் ஸ்பர், ஜாகுவார் XE உள்ளிட்ட கார்களும் சில பைக்களும் இருக்கிறதாம். இதுதவிர விலையுயர்ந்த வெளிநாட்டு நாய்களும் இருக்கிறது.