நடிகர் தனுஷின் 150 கோடியில் கட்டிய பிரம்மாண்ட வீடு!! வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் வாத்தி படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் தனுஷ் கடந்த 2021ல் போயஸ் கார்டனில் பல கோடி மதிப்பிலான இடத்தினை வாங்கி சமீபத்தில் முழுவதும் கட்டிவிட்டு குடியேறியிருந்தார்.
சுமார் 150 கோடி மதிப்பில் செலவு செய்து தன் பெற்றோருக்கு அர்பணித்துள்ளார் நடிகர் தனுஷ்.
தன்னுடைய பெற்றோர்களை அவமானப்படுத்திய ரஜினியை பழிவாங்க தான் இந்த வீட்டினை இப்படியொரு பிரம்மாண்டமாக கட்டியதாகவும் சிலர் கூறி வருகிறார்கள்.
மேலும் தன் மகன்கள் மற்றும் அண்ணன் தங்கை உட்பட அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவை கூப்பிடவில்லை என்ற தகவலும் பரவியது.
இந்நிலையில் 150 கோடியில் தனுஷ் உருவாக்கிய வீட்டின் வெளிப்புற தோற்றத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.