வாழ்க்கை பற்றி யோசிக்க இனி நேரமில்லை? யாரையும் நம்பமுடியாமல் தனுஷ் எடுத்த முடிவு

dhanush naanevaruven directtion rutra
By Edward Mar 29, 2022 10:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் தனுஷ், அசுரன், கர்ணன் படங்களின் வெற்றிக்கு பிறகு மாறன் படம் என்ற தோல்வியை கொடுத்தார். அதற்கு காரணம் தன் மனைவி ஐஸ்வர்யா மீது மனக்கஷ்டத்தில் இருந்ததாலும் விவாகரத்து பற்றி யோசித்ததாலும் தான் என கூறி வருகிறார்கள்.

விவாகரத்துக்கு பின்:-

தற்போது வீட்டு பிரச்சனையை எல்லாமே மறக்க தனுஷ் பல விஷயங்களில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார். அதன் முதற்படி இப்போதிருக்கும் படங்களை முடிக்கவும் கிடைக்கும் நேரத்தில் மகன்களுடன் நேரத்தினை செலவிடவுமாக இருந்து வருகிறார்.

இந்த காலகட்டத்தில் நடிப்பில் பின்னி பிடலேடுத்து கமலை தாண்டும் இடத்தில் இருந்தும் இப்படி ஒரு நிலைமையா என வேதனை பட்டாராம் தனுஷ். அதெக்கெல்லாம் பதிலடி கொடுக்கத்தான் ஒரு பெரிய கையுடன் பட்டைய கிளப்ப போகிறார் நடிகர் தனுஷ்.

கஷ்டத்தை போக்க இயக்கம் தான் மருந்து:-

பல வருடங்களுக்கு முன் நடிகர் தனுஷ் இயக்கத்தினை ஆரம்பிக்க வேண்டும் என்ற கனவில் இருந்து வந்தாராம். அதை தற்போது கையில் எடுக்க முடிவெடுத்துள்ளார். ரொம்ப வருடங்களுக்கு முன்பு ஒரு வரலாற்று கதையை எழுதி வைத்துள்ள படம் நான் ருத்ரன்.

இது தனுஷின் கனவு ப்ராஜெக்ட் என அனைத்து பேட்டியில் கூறி வந்தார். ஆனால் அதற்கான செலவு நேரம் எல்லாம் அதிகம் ஆகும் என்பதால் அப்படியே போட்டுவிட்டார். அதனை தூசி தட்டி தற்பொழுது பாகுபலிக்கு இணையாக எடுக்க போகிறாராம்.

அடுத்தகட்ட வேலை:-

அதில் தெலுங்கு நடிகரான அக்கினி நாகர்ஜுனா, சைக்கோ படத்தில் கலக்கிய நடிகை அதிதி ராவ் போன்றவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். நான் ருத்ரன் படத்தின் இசை அவருடைய ஆஸ்தான இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.

ஷான் ரோல்டன் நான் ருத்ரன் கதை கேட்டு மிரண்டே போயிட்டாராம். அவ்வளவு அற்புதமான கதை என ஒரு பேட்டியில் கூறினார். தனுஷ் பல படங்களில் கமிட் ஆகி இருந்தாலும் தற்பொழுது நான் ருத்ரன் பட வேலையை துவங்கி விட்டார்.

ஷூட்டிங் தொடங்க லேட் ஆனாலும் அதற்கு முன்னாடி கதை, திரைக்கதையை பட்டை தீட்டி வருகிறார். பட்ஜெட் அதிகமாக இருப்பதால் ஒரு சில கார்பரேட் நிறுவனம் முதலீடு செய்ய வருகிறார்கள். தனுஷும் அவர் பங்குக்கு கொஞ்சம் பணம் போட போகிறார்.