நடிகையுடன் இப்படியொரு போஸ்? நடிகர் தனுஷ் ஷூட்டிங்கில் வெளியான ரகசிய புகைப்படம் வைரல்
சூப்பர் ஸ்டார் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை 2004ல் திருமணம் செய்து இரு பிள்ளைகளை பெற்றெடுத்தவர் நடிகர் தனுஷ். நன்றாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 18 வருடங்கள் கழித்து இருவரும் விவாகரத்து பெற்று பிரியவுள்ளதாக அறிக்கை மூலம் செய்தியை வெளியிட்டனர்.
இந்த முடிவில் யார் அறிவுரை கூறினாலும் இருவரும் கேட்காமல் தங்கள் வேலைகளை பார்த்து வருகிறார்கள். அப்படி தன் படங்களில் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் தனுஷ் நடிப்பில் தி கிரேன் மேன் மற்றும் திருச்சிற்றம்பலம் படமும் வெளியாகவுள்ளது என்ற செய்தி வெளியாகி இருந்தது.
ஆனால் திருச்சிற்றம்பலம் படத்தில் சில பிரச்சனைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிகை நித்யா மேனனுடன் தனியாக இருந்து ஷூட்டிங்கில் நடித்திருக்கும் புகைப்படம் இணைத்தில் லீக்காகியுள்ளது, இதனை பலர் இணைத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.