40 வயசாகிடுக்கி, இனிமே காதலெல்லாம் எனக்கு செட்டாகாது!! தனுஷ் கொடுத்த ஷாக்கிங் பதில்..

Dhanush Gossip Today Tamil Actors
By Edward Jul 20, 2023 04:32 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து தற்போது ஹாலிவுட் நடிகராகவும் ஜொலித்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு தான் இயக்கி நடிக்கும் 50வது படத்தின் போஸ்டரை வெளியிட்டு ஷாக் கொடுத்தார் தனுஷ்.

இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன், எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பரத்பாலா இயக்கத்தில் தனுஷ், பார்வதி நடிப்பில் வெளியான படம் மரியான். அப்படத்தின் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பரத்பாலா, தனுஷ், ஏ ஆர் ரகுமான், பார்வதி போன்றவர்கள் வீடியோ காலில் பேசி பல விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அதில், இயக்குனர் பரத்பாலா தனுஷிடம், நீங்கள் காதல் படத்தில் நடிக்க வேண்டும், அதை நாங்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு தனுஷ், சிரித்துக்கொண்டே, எனக்கு 40 வயசாகிவிட்டது, இனி காதல் படமெல்லாம் எனக்கு செட்டாகாது என்றும் அதை அடுத்த தலைமுறை நடிகர்கள் பண்ணட்டும் என்று கூறியிருக்கிறார். இதற்கு ஏ ஆர் ரகுமானும் சேர்ந்து கலாய்த்துள்ளனர்.