நடிகையுடன் காதலில் இருந்த சிவகார்த்திகேயன்!! ரகசியத்தை உடைத்த தனுஷ்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் தனுஷ் - சிவகார்த்திகேயன். இருவரும் தோழர்களாக இருந்து இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சந்திக்காமல் இருந்து வருகிறார்கள் என்று கூறப்பட்டது. அதனை தொடர்ந்து தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் அவர்கள் பற்றி சில வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அப்படி 10 ஆண்டுகளுக்கு முன் சிவகார்த்திகேயனும் தனுஷும் டிடி தொகுத்து வழங்கிய பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய தனுஷ், மறியான் அவ்ளோ பெரிய படம், ஆனால் அந்த படத்தில் சிவகார்த்திகேயன் பெயரை மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறேன். தந்தை பெயரும், மகன் பெயரும் கொண்ட நடிகர், பூ நடிகையுடன் காதலா? என தான் மறியான் படத்தில் பேசியது சிவகார்த்திகேயனை பற்றி தான் என்று தனுஷ் விளையாட்டாக கூறினார்.
உடனே டிடி யார் அந்த பூ நடிகை? என்று கேட்க, அது மறியான் படத்தில் நடித்த நடிகை தான் என்று கிண்டலாக சிவகார்த்திகேயன் பேசி இருப்பார்.
சிவகார்த்திகேயன் மீது எப்போதும் கோபம் வராது என்றும் அது எந்த நடிகையும் கிடையாது, பெரிசா எந்த நடிகையையும் சொல்ல முடியவில்லை என்று தனுஷ் கூறியிருக்கிறார். ஆனால், அந்த நடிகை பார்வதி நாயர் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
You May Like This Video