8 வயதில் மரண போராட்டம்.. சாராவுக்கு நடந்த ஆபத்தான அறுவை சிகிச்சை..விஜே அர்ச்சனா..

Tamil Actress Archana Chandhoke
By Jai Jun 26, 2026 05:50 AM GMT
Report

பிரபல தொகுப்பாளினியாக திகழ்ந்து வரும் விஜே அர்ச்சனா, தன்னுடைய மகள் சாராவுக்கு அறுவை சிகிச்சை செய்தது குறித்து பேசியுள்ளார்.

8 வயதில் மரண போராட்டம்.. சாராவுக்கு நடந்த ஆபத்தான அறுவை சிகிச்சை..விஜே அர்ச்சனா.. | Vj Archana Emotional About Daughter Zaara Surgery

அதில், சாரா 8 வயதில் இருக்கும்போது ஒரு மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்தாள், அவளுக்கு அப்போது உயிர் போய்விட்டு வந்தது என்று தான் சொல்ல வேண்டும். அவளை காப்பாற்ற முடியுமா?முடியாதா? என்றே தெரியாத ஒரு சூழ்நிலையில் நாங்கள் இருந்தோம். உடலில் இருக்கும் இரண்டு ஓவரிகளில் இருந்து ஒரு சிறிய பைப் போன்ற நரம்பு கர்ப்பப்பையுடன் இணைக்கப்பட்டிருக்கும், ஒரு ஓவரியில் பலமுறை நரம்புகள் ஒன்றோடு ஒன்று சுற்றிக்கொண்டது. அதனால கடுமையான வலி மற்றும் பாதிப்பு அவளுக்கு ஏற்பட்டது.

உடனே அதை சரி செய்து பர்மனெட்-ஆக கிளிப் செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறினார்கள். அறுவை சிகிச்சை நடக்கும்போது, சாராவுக்குக் கடுமையான பாதிப்பு இருந்தால் அவளது கர்ப்பப்பையையே எடுக்க வேண்டிய சூழ்நிலை கூட வரலாம் என்று மருத்துவர்கள் கூறினர். ஒரு தாயாக என் உலகமே இருண்டுவிட்டது. எட்டு வயதே நிரம்பிய ஒரு சிறுமிக்குத் தன் கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்றால், எதிர்காலத்தில் இவள் தாயாக முடியுமா முடியாதா? என்ற ஒரு கொடுமையான நிலையில்தான் அவள் ஆபரேஷன் தியேட்டருக்குள் இருந்தாள்.

8 வயதில் மரண போராட்டம்.. சாராவுக்கு நடந்த ஆபத்தான அறுவை சிகிச்சை..விஜே அர்ச்சனா.. | Vj Archana Emotional About Daughter Zaara Surgery

உள்ளே அவளுக்குப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. வெளியே நாங்கள் அழுதுகொண்டே துடித்துக் கொண்டிருந்தோம். ஆனால், அது கடவுளின் அனுகிரகமோ, இல்லை நான் செய்த புண்ணியமோ, என் பெற்றோர்கள் செய்த புண்ணியமோ தெரியவில்லை. அறுவை சிகிச்சை முடிந்து மீண்டு வந்துவிட்டாள் என்று அர்ச்சனா கூறியிருக்கிறார். மேலும், இனி எந்தவிதமான பிரச்சனையும் இல்லை, கர்ப்பப்பை மிகவும் சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது என்று சொன்னார்கள். அதைக் கேட்ட பிறகுதான் எங்களுக்கு உயிரே வந்தது என்றும் கூறி எமோஷனலாக பேசியிருக்கிறார் விஜே அர்ச்சனா.