150 கோடியில் போயஸ் கார்டனில் பிரம்மாண்ட பங்களா!! வைரலாகும் தனுஷின் வீட்டின் வீடியோ..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து தற்போது பாலிவுட் நடிகராக கொடிக்கட்டி பறந்து பிரபலமாகியவர் நடிகர் தனுஷ். தற்போது கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு பிரிவதற்கு முன் போயஸ் கார்டனில் பல கோடி மதிப்பில் நிலம் ஒன்றினை வாங்கி பூஜையும் போட்டார்.
பின் ஐஸ்வர்யாவை பிரிந்து பெற்றோர்களுடன் இருந்து வந்த தனுஷ் மீண்டும் போயஸ் கார்டன் வீட்டினை கட்ட ஆரம்பித்து சமீபத்தில் 150 கோடி செலவில் அந்த பிரம்மாண்ட பங்களாவை முடித்துவிட்டார்.
சமீபத்தில் பெற்றோருக்கு பரிசாக அந்த வீட்டினை அளித்து கிரஹபிரவேசம் செய்து குடிவேறினார்.
வெளிப்புறத்தின் தோற்றம் மட்டுமே இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகியது. தற்போது தனுஷ் கட்டியிருக்கும் பிரம்மாண்ட வீட்டினை உள்கட்ட அமைப்பின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.