ஹாலிவுட் போனாலும் தமிழன் தான்? ஆனா ஒர்க்கவுட் ஆகலையேப்பா..
தென்னிந்திய சினிமாவில் பணியாற்றி பாலிவுட் சினிமாவை தொடுவது என்பதே பெரிய வேலையாக இருக்கும். அப்படி பாலிவுட் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்தவர் நடிகர் தனுஷ்.
தி கிரே மேன் படத்தின் மூலம் ஹாலிவுட் நடிகராக அறிமுகமாகிய தனுஷ் சமீபத்தில் அப்படத்தின் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வந்தார். தற்போது அப்படத்தின் பர்ஸ் ஆப் காட்சியில் முற்றிலும் காணாத தனுஷ் க்ளைமேக்ஸ் காட்சிக்கு முன் 30 நிமிடத்திற்கு தான் தோன்றுகிறார்.
அதுவும் ஒரு 5 நிமிட சண்டை காட்சி தான் தனுஷுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய வாய்ப்பு. அந்த காட்சியில் சிறப்பாக பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் 15 நிமிட காட்சியில் கூட நடிக்காமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
அப்படி இருந்தாலும் தமிழின் பெருமையை ஹாலிவுட் வரை கொண்டு சென்றுள்ளார் நடிகர் தனுஷ். படத்தில் வில்லன் கூட அவரை தமிழா என்று கூறுவதையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.