ரெட் கார்ட்டில் இருந்து தப்பித்த நடிகர் தனுஷ்.. ஆனா ரெண்டு கண்டீசன்..

Dhanush Gossip Today Actors Tamil Actors
By Edward Sep 12, 2024 01:30 PM GMT
Edward

Edward

Report

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், ராயன் படத்திற்கு பின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தினை தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து மற்றொரு படத்தினையும் இயக்கவுள்ளார் தனுஷ்.

ரெட் கார்ட்டில் இருந்து தப்பித்த நடிகர் தனுஷ்.. ஆனா ரெண்டு கண்டீசன்.. | Dhanush Red Card By Tfpc Revoked Issues Solved

இப்படி பல விஷயங்களை செய்து வரும் தனுஷ், பிரபல தயாரிப்பு நிறுவனங்களிடம் அட்வான்ஸ் தொகையை வாங்கி அந்த படங்களில் நடிக்காமல் இழுத்தடித்ததாக கூறி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், ரெட் கார்ட் விதித்ததாக தகவல் வெளியானது.

தற்போது அந்த பிரச்சனை பேச்சுவார்த்தையில் முடித்து தீர்க்கப்பட்டுள்ளதாம். தன்மீது விதிக்கப்பட்ட தடை தொடர்பாக தனுஷ் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளாராம்.

ரெட் கார்ட்டில் இருந்து தப்பித்த நடிகர் தனுஷ்.. ஆனா ரெண்டு கண்டீசன்.. | Dhanush Red Card By Tfpc Revoked Issues Solved

பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிப்பது, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்திடம் பெற்ற அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்துவது என இரு கண்டீசன்களுக்கு தனுஷ் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த இரு நிபந்தனைகளை தொடர்ந்து தனுஷ் மீது விதிக்கப்பட்ட ரெட் கார்ட் தடையை நீக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாம்.