இனி என்னை அந்த வார்த்தை சொல்லி யாரும் ட்ரோல் செய்ய முடியாது.. தனுஷுக்கு வந்த தைரியம்
தனுஷ் தற்போது இந்திய சினிமா துறையினர் வியக்கும் வண்ணம் ஹாலிவுட்டில் தடம் பதித்துவிட்டார். அவர் கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருக்கிறார். அந்த படம் தற்போது நெட்பிலிக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் வெளியாகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் இது பற்றி பேட்டி கொடுத்திருக்கும் தனுஷ் தன்னை ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
இளம் வயது தனுஷுக்கு நான் இப்போது ஒரு அட்வைஸ் கொடுப்பது என்றால், என் தோற்றத்தை வைத்து ட்ரோல் செய்பவர்களை நினைத்து வருத்தப்படாதே, ஒரு நாள் ஒரு ஹாலிவுட் நடிகர் வந்து உன்னை பார்த்து 'Sexy Tamil friend' என சொல்வார்.. என தனுஷ் கூறி இருக்கிறார்.
அவர் எலும்பும் தோலுமாக உடல் வைத்து இருப்பதை மிக மோசமாக ஒரு தரப்பினர் விசாரித்து வருகின்றனர். அது போன்ற ட்ரோல்கள் இனி வராது என தனுஷ் நம்புகிறார் போல.
.@dhanushkraja has a message for his younger self and it’s the most badass advice we’ve ever heard ❤️? pic.twitter.com/XiCf4IcND0
— Netflix India (@NetflixIndia) July 24, 2022