மனைவி ஐஸ்வர்யாவை கழட்டி விட்டாலும் அதை மட்டும் விடாத தனுஷ்!! பூரித்துப்போன ரஜினி ரசிகர்கள்..
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருந்து தற்போது பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று மிகப்பெரிய இடத்தினை பிடித்திருப்பவர் நடிகர் தனுஷ். தற்போது கேப்டன் மில்லர் படத்தினை முடித்துவிட்டு, தானே இயக்கி நடிக்கும் தன்னுடைய டி50 படத்தின் ஷூட்டிங்கில் இருந்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்த தனுஷ் இரு மகன்களை பெற்றெடுத்தார். மகன்கள் பெரியவர்களான நிலையில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரியவுள்ளதாக கடந்த 2021ல் அறிக்கை மூலம் அறிவித்து ஷாக் கொடுத்தனர்.
18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்ட செய்து பலருக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும், தனுஷ் - ஐஸ்வர்யாவை ரஜினிகாந்த் சேர்த்து வைக்க முற்பட்டும் இருக்கிறார். ஆனால் அவரின் பேச்சை கேட்காமல் தனுஷ் வேலையை பார்த்து வருகிறார்.
என்ன தான் மனைவியை பிரிந்தாலும் தன் மகன்கள் விசயத்தில் தன்னை ஈடுபடுத்தியும் வருகிறார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது எப்போதும், தனுஷுக்கு மரியாதை இருப்பது அனைவருக்கும் தெரிந்தவொன்று தான்.
அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறுவதை மட்டும் தனுஷ் இன்னும் நிறுத்தவில்லை. இன்று காலை தனுஷ், தன் தலைவர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து கூறி ஒரு பதிவினை எக்ஸ் தளத்தில் பதிவிட்டது தற்போது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும் வருகிறது.
Happy birthday Thalaiva @rajinikanth ????♥️♥️♥️
— Dhanush (@dhanushkraja) December 12, 2023