விவாகரத்துக்கு பின் யாத்ரா, லிங்காவால் ஐஸ்வர்யா பற்றி கூறிய நடிகர் தனுஷ்.. படிச்ச பொண்ணுல அதான் அப்படி..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகை தனுஷ். கடந்த 2204 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுடன் நெருக்கமாக நடித்தார்.
இதன்பின் சர்ச்சையில் சிக்கினாலும் மனைவி இதைபற்றி கண்டுகொள்ளாமல் 18 வருட திருமண வாழ்க்கையில் யாத்ரா, லிங்கா இரு மகன்களை பெற்றார். தற்போது இரு மகன்கள் வளர்ந்து விட்ட நிலையில், தனுஷ் ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிடுவதாக அறிக்கை மூலம் முடிவினை வெளிப்படுத்தினர்.
இதன்பின் இரு மகன்களும் அப்பா, அம்மா இருவருடனும் சென்று நேரத்தினை செலவு செய்து வருகிறார்கள். அந்தவகையில் தனுஷ் நடித்த ஹாலிவுட் படமாக தி கிரே மேன் படத்தின் பிரஸ்மீட்டில் கூட மகன்களை அறிமுகப்படுத்தினார்.
அதன்பின் வீடு திரும்பி அம்மாவிடம் சேர்ந்து புகைப்படமும் எடுத்துகொண்டனர். சில நாட்களுக்கு முன் அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் மகன்கள் யாத்ரா, லிங்கா பற்றிய சில விசயங்களை பகிர்ந்து கொண்டார் தனுஷ்.
யாத்ரா என்னை மாதிரி அமைதியானவர் என்றும் நாம எதாவது சொன்னால் அதைப்பற்றி யோசிப்பார் என்றும் கூறியுள்ளார். சாப்பாட்டில் நானும் அவனும் வெஜிடேரியன். ஆனால் லிங்கா அவன் அம்மா மாதிரி. உஷாரான பையன் என்றும் அவனை ஏமாற்றவே முடியாது என்றும் அவங்க அம்மா மாதிரி அவனை ஏமாற்ற முடியாது.
எதுலையுமே ஷார்ப் தான். அவங்க அமா படிச்சவங்க இல்லையா என்று கூறியுள்ளார். அது எப்படி ஏமாற்ற முடியாதுனு சொல்றீங்க என்று தொகுப்பாளர் கேட்க, அட நல்லவிதமா தாங்க சொல்றேன் என்று சிரித்தபடி கூறினார் தனுஷ்.