தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு இதுதான் காரணமா!! ரஜினி மகள் செளந்தர்யா சொன்ன ரகசியம்..

Dhanush Aishwarya Rajinikanth Soundarya Rajinikanth
By Edward Dec 26, 2023 08:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தினை தொடர்ந்து டி50 படத்தினை இயக்கி நடித்து முடித்துள்ள தனுஷ், 3வது படத்தினையும் இயக்கி வருகிறார்.

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு இதுதான் காரணமா!! ரஜினி மகள் செளந்தர்யா சொன்ன ரகசியம்.. | Dhanush Soundarya Rajinikanth Issues Soundarya

தனுஷ் இயக்கும் அவரது மூன்றாவது படத்தில் பவிஷ், அனிகா, பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கத்தூன், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்ட பல நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளத்தொடர்பில் சிக்கிய அயலான் நாயகன்!! இமான் விசயத்தில் மெளனம் கலைப்பாரா சிவகார்த்திகேயன்!!

கள்ளத்தொடர்பில் சிக்கிய அயலான் நாயகன்!! இமான் விசயத்தில் மெளனம் கலைப்பாரா சிவகார்த்திகேயன்!!

இந்நிலையில் செளந்தர்யா இப்படத்தினை குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவுக்கு என்ன காரணம் என்ற ரகசியத்தை மறைமுகமாக கூறியிருக்கிறார் ரஜினிகாந்தின் இரண்டாம் மகள் செளந்தர்யா.

அதில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் கதை தனுஷ் எழுதியிருந்ததாகவும், அதை நான் தான் இயக்க இருந்தேன் எனவும் கூறியிருந்தார். ஆனால், மூன்று பாய்ஸ், மூன்று கேர்ல்ஸ் சம்பந்தமான கதை என்பதால் நடிகர்கள் தேர்வில் குழப்பம் இருந்ததால் என்னால் இயக்க முடியவில்லை, அது தனுஷின் படம் தான் என்று கூறியிருக்கிறார் செளந்தர்யா.

தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு இதுதான் காரணமா!! ரஜினி மகள் செளந்தர்யா சொன்ன ரகசியம்.. | Dhanush Soundarya Rajinikanth Issues Soundarya

தனுஷ், ஐஸ்வர்யாவை பிரிவதற்கு முன் செளந்தர்யாவுடன் இணைந்து பண்ணவிருந்த படம் தான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இடையில் ஐஸ்வர்யாவுடன் பிரச்சனை ஏற்பட, தன் தங்கையுடன் சேர்ந்து படம் பண்ணக்கூடாது என்றும் சண்டைப் போட்டிருக்கிறாராம்.

அதன்பின் இருவரும் பிரிய அந்த படம் குறித்த தகவல் தெரியாமல் இருந்தது. தற்போது செளந்தர்யா ரஜினிகாந்த் சொன்னதை வைத்து தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு முக்கிய காரணமாக இப்படம் தான் காரணமாக இருக்கும் என்று கேள்விகள் எழுந்துள்ளது.