மாமியார் இருக்கும் போதே தியேட்டரில் நடிகை திரிஷாவுடன் தனுஷ்!! வைரலாகும் புகைப்படம்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தை முடித்துவிட்டு அடுத்து தானே இயக்கி நடிக்கும் டி50 படத்தின் வேலைகளில் இருந்து வருகிறார்.
அதற்காக மொட்டை போட்டுள்ள தனுஷ், தற்போது வெளியாகியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை பார்க்க சென்றிருக்கிறார்.
என்ன தான் மனைவியை பிரிந்து மாமனார் ரஜினியிடம் பேசாவிட்டாலும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகராக முதல் நாள் முதல் காட்சியை ரோஹினி திரையரங்கில் பார்த்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிகை திரிஷாவுடன் தியேட்டரில் படம் பார்த்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தந்த நேரத்தில் நடித்து வரும் படத்தின் கதாநாயகிகளுடன் தனுஷ் படம் பார்க்க செல்வது வழக்கம்.
அப்படி பேட்ட படத்தின் போது இருவரும் இணைந்து படம் பார்த்திருக்கிறார்கள். இதனை ரசிகர்கள் இணையத்தில் கசியவிட்டு கலாய்த்தும் வருகிறார்கள்.