விவாகரத்துக்கு பின் டாக்டர் நடிகையின் கட்டுப்பாட்டில் தனுஷ்! சொந்தங்களை மறக்கும் வாத்தி...

Dhanush Sai Pallavi
By Edward 2 மாதங்கள் முன்
Edward

Edward

225 Shares

வாத்தி, கேப்டன் மில்லர்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படத்திற்கு பிறகு வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் அடுத்தடுத்த இயக்குனர்கள் படங்களிலும் கமிட்டாகி வரும் தனுஷ் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவிருக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

அப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. தற்போது நடிகர் தனுஷ் தமிழ் இயக்குனர்களின் கதைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு தெலுங்கு பக்கம் சென்றுள்ளது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. ஆனால் இதன் பின்னணி இருப்பது அவருடன் ரவுடி பேபி கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி தானாம்.

விவாகரத்துக்கு பின் டாக்டர் நடிகையின் கட்டுப்பாட்டில் தனுஷ்! சொந்தங்களை மறக்கும் வாத்தி... | Dhanush Under The Control With Doctor Actress

நடிகையின் கட்டுப்பாட்டில் தனுஷ்

மாரி 2 படத்தில் ஜோடியாக நடித்த போது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் தான் சாய் பல்லவி தெலுங்கு இயக்குனர்களுக்கு தனுஷை சிபாரிசு பண்ண காரணாமாக இருந்து வருகிறதாம். ஏற்கனவே வாத்தி படத்தின் தெலுங்கு இயக்குனரை சாய் பல்லவி தான் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

இப்படியே போனால் தனுஷ் தெலுங்கு தேசத்தில் செட்டிலாகி விடுவாரோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விவாகரத்து செய்திய அறித்த நாளில் இருந்து யாரிடமும் சொந்தங்களிடமும் பேசாமல் இருந்து வருகிறார் தனுஷ்.

இப்போது சாய் பல்லவி என்ன கூறினாலும் மறுப்பு கூறாமல் சம்மதம் தெரிவித்து வருகிறாராம். இதனை பிரபல சினிமா விமர்சகர்கள் வலை பேச்சு யூடியூப் சேனலில் கூறியுள்ளனர்.

Gallery