மதிக்காமல் அசிங்கப்படுத்திய ரஜினிகாந்த்!! மாமனார் வீட்டு பக்கத்தில் 150 கோடியில் பங்களா கட்டிய தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். அவர் நடிப்பில் வாத்தி படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
அப்படத்திற்கு பின் தனுஷ் போயஸ் கார்டனில் இரு ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் வீட்டிற்கு பக்கத்திலேயே 150 கோடி அளவில் பிரம்மாண்ட வீட்டினை கட்ட பூஜை நடத்தி, தற்போது அந்த வீட்டிற்கான கிரஹபிரவேசத்தை முடித்திருக்கிறார்.
வீட்டின் புகைப்படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் சில செய்திகளை பகிர்ந்துள்ளார்.
தனுஷ், ரஜினி மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தது முதல் தன்னுடைய பெற்றோர்களை சரியாக மதிக்காமல் அவமானப்படுத்தி வந்துள்ளாராம்.
ஒரு சம்மந்தியை சரியாக வைக்காமல் மூன்றாம் கட்ட கேட்டகரியில் வைத்ததால் தான் ரஜினிகாந்தை பழி வாங்கி ஒரு பிராமணரின் நிலத்தை வாங்கியிருக்கிறார். அப்படி வாங்கி பிரம்மாண்ட வீட்டை கட்டி இருக்கிறார் தனுஷ்.
கஸ்தூரி ராஜா ஆரம்பத்தில் கடன் வாங்கி படத்தினை எடுக்கும் போது அதில் கடன் ஏற்பட்டு வழக்கு போடப்பட்டது. இதற்கிடையில் ரஜினிகாந்தை சில வழக்கில் இழுத்ததால் ரஜினிகாந்த் பின் வாங்கி இருக்கிறார்.
இதன்பின் தனுஷ் கொஞ்சம் மனதளவில் கஷ்டப்பட்டதால் தான் இந்த பிரம்மாண்ட பங்களாவை கட்டியிருக்கிறார் என்று அந்தணன் கூறியிருக்கிறார்.