உங்க மாமனார் தான் காரணம்! மேடையில் மகன்கள் முன் தனுஷை கலாய்த்த இளையராஜா..
dhanush
rajinikanth
valli
linga
ilaiyaraaja
yathra
rockwithraaja
yuvansankarraja
By Edward
தமிழ் சினிமாவின் இசைஞானியாக திகழ்ந்து வரும் இளையராஜாவை வைத்து பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ராக் வித் ராஜா என்ற இசை கச்சேரியை நடத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தமிழ் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கும் நடிகர் தனுஷ் தனது இரு மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் முதல் வரிசையில் அமர்ந்து கண்டுகளித்தார். வள்ளி படத்தின் என்னுள்ளே என்னுள்ளே என்ற பாடலை மகாராஷ்டிரா பாடகி விபவரி பாடி முடித்தப்பின் தனுஷை எழுந்திருக்க வைத்துள்ளார்.
தனுஷை பார்த்து இந்த பாடலை பிடிச்சிருக்கா என்று கேட்க ஆமாம் என தனுஷ் கூறியுள்ளார். இந்த பாடலின் மிகப்பெரிய வெற்றிக்கு உங்க மாமனார் தான் காரணம் என்று கூறியுள்ளார். உடனே மெளனமாக இருந்து புன்னையோடு தலையசைத்துள்ளார். இதை கேட்டு அங்கிருந்தவர்கள் ஆரவாரத்தில் கத்தியுள்ளனர்.
