விவாகரத்துக்கு பின் அடிமேல் அடிவாங்கும் தனுஷ்! புலம்பித்தள்ளும் தயாரிப்பு நிறுவனம்

Dhanush
By Edward May 17, 2022 09:14 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தன் அண்ணன் செல்வராகவனால் அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்தடுத்த படங்களில் அவரின் இயக்கத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்து வந்தார்.

இதன்பின் அவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வடசென்னை, அசுரன், கர்ணன் போன்ற படங்கள் மக்களால் கொண்டாடப்பட்ட படங்களாக அமைந்தது. கடந்த ஜனவரி மாதம் 18 வருடங்களாக குடும்பம் நடத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்து பிரிந்தார்.

பல காரணங்கள் இதற்காக கூறப்பட்ட நிலையில் தனுஷ் சமீபத்தி நடித்து வெளியான மாறன் படம் படுதோல்வியை சந்தித்தது. அதேசமயம் திருச்சிற்றம்பலம் படமும் வெளியாகுவதில் தாமதமாகியுள்ளது.

நடிப்பை தாண்டி wunderbar films என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி விஐபி, காக்கி சட்டை, விசாரணை, காலா, விஐபி 2, மாரி 2 போன்ற படங்களையும் தயாரித்திருந்தார் தனுஷ். இதற்கான யூடியூப் சேனலும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வந்தது.

கடைசியா ரவுடி பேபி பாடம் பல சாதனைகளை பெற்றிருந்தது. இந்நிலையில் wunderbar films தற்போது ஹேக் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதை எப்படி மீட்கும் பணியில் தனுஷ் பெரிய குழப்பத்தில் இருந்து வருகிறாராம். தனுஷிற்கு சமீபகாலமாக நேரமே சரியில்லையே என்று ரசிகர்கள் புலம்பியும் வருகிறார்கள். மேலும் தனுஷின் wunderbar films-ஐ ஹேக் செய்தது போல் லைக்கா நிறுவனத்தின் யூடியூப் சேனலையும் ஹேக் செய்துள்ளார்கள் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.