இழுத்து மூடிய இட்லி கடை!! கரை சேருமா தனுஷின் கர படம்!! காத்து வாங்கும் டிக்கெட் புக்கிங்...
கர படம்
இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ், மமிதா பைஜு, கே எஸ் ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமுடு, ஜெயராம், கருணாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் கர.
ஏப்ரல் 30 ஆம் தேதி கர படம் ரிலீஸ்யாகவுள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு ஓபன் செய்யபப்ட்டு ஒரு நாளான நிலையிலும் இன்னும் பல திரையரங்குகளில் பெரிதாக டிக்கெட் புக்கிங் செய்யப்படவில்லை என்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஆடியோ வெளியீட்டு விழா, ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி என்று இதுவரை படத்தின் பிரமோஷன் வேலைகள் நடத்தினாலும் இன்னும் ரச்கர்கள் மத்தியில் தனுஷ் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வம் எழவில்லை என்று கூறப்படுகிறது.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், குபேரா, தேரே இஷ்க் மே போன்ற படங்களில் வெளிமாநிலங்களில் நல்ல வரவேற்பு பெற்றாலும் தமிழில் சுமாரான வரவேற்பையும் வசூலையும் தான் பெற்றுக் கொடுத்தது. இதனை பார்த்த பலரும் நெட்டிசன்கள் கர படம் தேராதோ என்ற கருத்துக்களை கூறி கலாய்த்து வருகிறார்கள்.