சிவகார்த்திகேயனின் வெற்றியை கூண்டோடு ஒழிக்க தனுஷ் போட்ட பிளான்!! பின்னணியில் ப்ளூ சட்டை..
தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த முன்னணி நடிகர் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர் என்ற இடத்தினை பெறக்காரணமாக இருந்தவர் நடிகர் தனுஷ். ஆனால் தற்போது இருவருக்கும் பிரச்சனை என்று கூறப்பட்டு இருவரும் சந்திப்பதே இல்லை என்ற தகவலும் பரவியது.

தனுஷ் - சிவகார்த்திகேயன்
எப்படி அஜித் - விஜய் படங்கள் வந்தால் இருத்தரப்பு ரசிகர்கள் சண்டையிட்டுக்கொள்கிறார்களோ, அதேபோல் தான் தனுஷ் - சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மாறிமாறி வாக்குவாதம் சண்டை என்று இருந்து வருகிறார்கள்.
சமீபத்தில் கூட திருச்சிற்றம்பலம் - பிரின்ஸ் படம் வெளியாகி இரு நடிகர்களின் ரசிகர்கள் சண்டையிட்டு கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், சிலரின் சூழ்ச்சியால் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் படுதோல்வியை அடைந்துள்ளது என்றும் வேண்டுமென்றே நெகடிவ் விமர்சனத்தை கூறி தோல்வியடையச் செய்துளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ப்ளூ சட்டை மாறன்
அந்தவகையில் ப்ளூ சட்டை மாறன் தனுஷின், திருச்சிற்றம்பலம் படத்தை புகழ்ந்தும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை கண்டபடி விமர்சித்தும் இருக்கிறார். சிலரின் அறிவுறுத்தலின் பேரில் தான் ப்ளூ சட்டை மாறன் இப்படி விமர்சித்துள்ளார் என்பதற்கு ஆதாரமாக ஒரு வீடியோவையும் பகிர்ந்து வருகிறார்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.
பிரின்ஸ் படத்தினை பார்க்க ப்ளூ சட்டை மாறனுடன் தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் சுப்ரமணிய சிவா சென்றுள்ளார். அவர் கூறியதால் தான் ப்ளூ சட்டை இப்படியான விமர்சனத்தை பிரின்ஸ் படத்துக்கு கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
ஓ இது தான் விஷயமா ?
— Premkumar Pro (@Pro_Premkumar) December 16, 2022
Shared Video ? https://t.co/egBER2TIuJ pic.twitter.com/WtyQtvR4Jc