நீலநிற ஆடையில் சிக்ஸ்பேக் லுக்.. நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட கிளாமர் புகைப்படம்..
சின்னத்திரையில் ஒருசில சீரியல்களில் சிறு ரோலில் நடித்து வந்தவர் நடிகை தர்ஷா குப்தா. இதன்பின் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய செம்பருத்தி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
குக் வித் கோமாளி 2
இந்த சீரியலில் நடிக்கும் போதே குக் வித் கோமாளி 2 சீசனில் கலந்து கொண்டு புகழுடன் ரொமாண்டிக் செய்து வந்தார். இதன்பின் வெள்ளித்திரையில் நடிகர் ரிச்சர்ட் நடிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா கிளாமரில் எல்லைமீறிய பிகினி, கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் சன்னி லியோனி பேய் ரோலில் நடித்த ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் தர்ஷா குப்தா நடித்துள்ளார்.
கிளாமர் மாடர்ன் ஆடை
அப்படத்தின் டிரைலர் லான்ச் நிகழ்ச்சியில் சன்னி லியோன் சேலையில் வர தர்ஷா மாடர்ன் ஆடையில் வந்திருந்தார். இதனை கலாய்த்து சதீஷ் பேசிய விசயம் இணையத்தில் பெரியளவில் விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில் நீலநிறத்தில் கிளாமர் மாடர்ன் ஆடை அணிந்து சிக்ஸ்பேக் காட்டும் லுக்கி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அதை பார்த்து கண்டபடி வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


