அடேங்கப்பா...முகேஷ் அம்பானியின் திருபாய் பள்ளியின் ஆசிரியர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
திருபாய் அம்பானி இன்டர்நேஷ்னல் ஸ்கூல்
உலகமே மிரண்டு போகும் அளவிற்கு வியக்கும் வகையில் பிரம்மாண்ட குடும்பமாக திகழ்ந்து வருபவர்கள் தான் அம்பானி குடும்பத்தினர். முகேஷ் அம்பானியின் அத்தனை லட்சக் கோடியில் சொத்தில் முக்கிய பங்கினை வகித்து வருகிறது திருபாய் அம்பானி இன்டர்நேஷ்னல் ஸ்கூல்.
இப்பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் சர்வதேச பள்ளியின் வருடாந்திர நாள் விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
கல்விக்கட்டணம்
மழலையர் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இருக்கும் திருபாய் அம்பானி இன்டர்நேஷ்னல் ஸ்கூலில் 2023 - 2024 கல்வியாண்டிற்காக கல்விக்கட்டணம் மழலையர் பள்ளிக்கு ரூ. 14 லட்சம் முதல் 12 ஆம் வகுப்புக்கு ரூ. 20 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
கிண்டர்கார்டன் முதல் 7-ஆம் வகுப்பு இருக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1.70 லட்சம் கட்டணம் என்ற முறையில் மாதம் 14 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
8ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை இருக்கும் மாணவர்களின் ஆண்டுக்கட்டணம் ரூ. 5.9 லட்சமும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் ஆண்டுக்கட்டணம் ரூ. 9.65 லட்சமும் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் சம்பளம் எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது.
ஆசிரியர்களின் சம்பளம்
திருபாய் அம்பானி இன்டர்நேஷனல் ஸ்கூலில் ஆசிரியரின் சம்பளம் அவர்களுடைய அனுபவம் மற்றும் பதவியை பொறுத்து மாறுபடுகிறதாம். அப்படி ஒரு ஆரியருக்கான சம்பளம் மாதத்திற்கு ரூ. 15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை இருக்கும்.
இதில் அடிப்படை சம்பளம் மற்றும் கூடுதல் சம்பளமும் அடங்கும், இந்த பள்ளியில் சராசரியாக மாதத்திற்கு 42 ஆயிரம் வரை சம்பளம் பெருபவர்களும் உள்ளனர். மேல்நிலைப்பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கு ஆண்டு சம்பளமாக ரூ. 6 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.
