14 வயதில் சினிமா பயணம்!! ஒரே வருடத்தில் 12 படம்!!19 வயதில் மரணமடைந்த இளம் நடிகை..
உச்ச நட்சத்திரமாக வரவேண்டிய கலைஞர்கள் காலத்தின் சூழலில் சிக்கி சீக்கிரமே மறைந்துவிடுகிறார்கள். அப்படியான ஒரு இளம்நடிகை ஒரே ஆண்டில் 12 படங்களில் நடித்து சாதனை படைத்து உச்சத்தில் இருந்தார்.
திவ்ய பாரதி
ஆனால் அவரின் 19வது வயதிலேயே உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அந்த நடிகை தான் திவ்ய பாரதி. 14 வயதில் மாடலிங் துறையில் நுழைந்து சினிமா வாய்ப்புகள் கிடைக்க வெள்ளித்திரை வாய்ப்பை பெற்றார்.
1990ல் வெளியான நிலா பெண்ணே என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி, பாபிலி ராஜா என்ற தெலுங்கு படத்திலும் விஸ்வாத்மா என்ற பாலிவுட் படத்தில் நடித்து பிரபலமானார்.
ஒரு வருடத்திற்குள் தொடர்ச்சியாக பல வெற்றிப்படங்களில் நடித்து ஈர்த்த திவ்ய பாரதி, ஷாருக்கானுடன் திவானா படத்தில் நடித்து மிகப்பெரிய இடத்தை பிடித்தார். ஆனால் இப்படியான சூழலில் ஒரு நடிகையின் மர்மமான மரணம் திரைத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
1993 ஏப்ரல் 5 ஆம் தேதி வீட்டின் பால்கனியில் இருந்து விழுந்து இறந்தார். திவ்ய பாரதி தற்போது இறந்து 32 வருடங்களாகியும் ரசிகர்களின் மனதில் அவர் இப்போதும் நிலைத்துள்ளார். பெரிய நடிகைகளாக இருந்த ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் கூட செய்யமுடியாத மாயாஜாலத்தை திவ்ய பாரதி செய்தார்.
அப்போதைய காலக்கட்டத்தில் ஒரு வருடத்தில் அதிகபட்ச எண்ணிக்கையிலான படங்கள் வெளியானதன் மூலம் ஒரு சாதனையை படைத்தார். எந்த நடிகையாலும் ஒரு வருடத்தில் 12 படங்களில் நடித்து வெளியான சாதனையை தான் திவ்ய பாரதி படைத்திருந்தார்.
அதாவது 1992ல் மட்டுமே அவரது நடிப்பில் 12 படங்கள்
வெளியாகியது. 14 வயதில் மாடலிங்கில் அறிமுகமாகி
இயக்குநரும் தயாரிப்பாளருமான சஜித்
நதியத்வாலாவை மணந்து, திருமணமாகி சில
வருடங்களிலேயே 1993ல் காலமானார். உச்சத்தில்
இருந்த 19 வயதில் இளம் நடிகை திவ்ய பாரதி
மரணமடைந்த அனைவருக்கும் அதிர்ச்சியை
கொடுத்தது.