உனக்கெல்லாம் இந்த டிரஸ் தேவையா.. டிடி- யை ஆடையை மாத்திட்டு வான்னு சொன்ன நடிகை..
விஜய் டிவியில் பல ஆண்டுகாலமாக தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார் vj டிடி.
தற்போது விவாகரத்துக்கு பின் சில படங்களிலும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் எடுத்த பேட்டியில் நடிகை ஒருவர் தன்னை அசிங்கப்படுத்திய விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் ஒரு நடிகையை பேட்டி எடுப்பதற்காக நான் ரெடி ஆகி இருந்தேன். நடிகை வந்ததும் என் ஆடையை பார்த்து, என் ஆடை போல் நீங்களும் போட்டு இருக்கிங்க, மாத்திட்டு வாங்க என்று ஹர்ட் செய்தது போல் பேசினார்.
நான் ஒரு டிரஸ் தான் எடுத்து வந்துள்ளேன் என்று கூறியதும், நிகழ்ச்சி இயக்குனர் அவரை சமாதானப்படுத்தி தொடர வைத்தார். ஆனால் எனக்கு அவர் சொன்னது உனக்கெல்லாம் எதுக்கு இந்த டிரஸ் என்று கூறியது போல் இருந்ததால் வருந்தியதாகவும் அதன்பின் எந்த கோவமும் இல்லாமல் நிகழ்ச்சியை முடித்ததாகவும் டிடி பேட்டியில் கூறினார்.