துருவ் விக்ரம் நடித்த இரண்டு படமும் ஹிட் இல்ல.. ஆனால் இவருக்கு சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?
நடிகர் விக்ரமின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் துருவ் விக்ரம். தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ஆதித்யா வர்மா என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இப்படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து விக்ரம் நடிப்பில் வெளியான மகான் படத்தில் வில்லனாக நடித்தார். இப்படத்தில் விக்ரம் ரோலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் துருவ் விக்ரம் நடித்த கதாபாத்திரத்தை பெரிதாக பேசப்படவில்லை.
தற்போது இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில் இப்படத்திற்காக துருவ் விக்ரம் ரூபாய் 5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது வரை துருவ் விக்ரம் நடித்த இரண்டு படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுக்காத நிலையில் தற்போது இவருக்கு கோடியில் சம்பளம் கொடுத்தது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.