பாலிவுட்டில் மிரள வைக்கும் 21 வயது சாரா அர்ஜுன்.. ரீசெண்ட் புகைப்படங்கள்..
சாரா அர்ஜுன்
நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2011ல் வெளியாகி மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்ற படம் தான் தெய்வத்திருமகள். இப்படத்தில் குட்டி நட்சத்திரமாக சாரா அர்ஜுன் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இப்படத்திற்கு பின் சைவம், சித்திரையில் நிலாச்சோறு, விழித்திரு, சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிப்படங்களிலும் நடித்து வந்தார் சாரா.
6 வயதில் குட்டி நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன், பொன்னியின் செல்வன் படத்தில் சிறுவயது நந்தினி ரோலில் நடித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
இதனையடுத்து தற்போது பாலிவுட்டில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக துரந்தர் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 5 ஆம்தேதி வெளியாகவுள்ளது.

போட்டோஷூட்
நிகழ்ச்சியில் வந்த சாரா அர்ஜுனை
பார்த்த பலரும் வியந்து அவரின்
புகைப்படங்களை இணையத்தில்
பகிர்ந்து வைரலாக்கினர். தற்போது
இறுக்கமான ஆடையணிந்து எடுத்த
போட்டோஷூட் புகைப்படங்களை
பகிர்ந்து அனைவருக்கும் அதிர்ச்சி
கொடுத்துள்ளார் சாரா அர்ஜுன்.









