கதை இல்ல, ஹீரோ காலி.. வலிமை அஜித்தை மோசமாக பேசிய தயாரிப்பாளர்

Valimai Ajith Kumar
By Parthiban.A Feb 26, 2022 05:00 PM GMT
Report

வலிமை படம் தான் இப்போது தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸை கலக்கிக்கொண்டிருக்கிறது. சாதனை வசூல் வந்திருப்பதாக சினிமா வட்டாரத்தினர் கூறி வருகின்றனர். தயாரிப்பாளரும் தனக்கு இன்னும் வசூல் கணக்கு முழுமையாக வரவில்லை, விநியோகஸ்தர்கள் பிரம்மாண்ட வசூல் வந்திருப்பதாக சொல்கிறார்கள் என பேட்டி அளித்து இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் அஜித்தை விமர்சிக்கும் வகையில் இன்று பேசி இருக்கிறார். ரஜினி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் கூறியதாவது..

"சமீபத்தில் வந்த மிகப்பெரிய பிரம்மாண்ட படத்தில் கதை சரியாக இல்லாததால் ஹீரோக்களே காலி. நடிக்கிற படத்துக்கு ஆடியோ பன்க்ஷனுக்கு வரணும். நாலு படம் ஜெயித்துவிட்டது நான் வரமாட்டேன் என சொன்னால் basement strong ஆக இருக்காது. இந்த திமிர் யார்கிட்ட இருக்குதோ அவங்க சரியா இருக்க மாட்டாங்க. நான் தப்பா எதுவும் சொல்ல விரும்பல" என ராஜன் பேசி இருக்கிறார்.

அஜித்தை பற்றி தான் அவர் மறைமுகமாக இப்படி பேசி இருக்கிறார் என அனைவரும் கூறி வருகின்றனர்.