சிவகார்திகேயனுக்கே நோ சொல்லும் நடிகை! காரணம் தான் ஹைலைட்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் சிவகார்திகேயன். அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பு எப்போது உச்சத்திலேயே இருக்கிறது. டாக்டர் படம் ஹிட் ஆன பிறகு டான் படத்தில் அவர் நடித்து வருகிறார்.
அடுத்து ஜதி ரத்னாலு என்ற தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க போகிறார்.
அந்த படத்தில் சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை என தெரிகிறது.
சிவகார்த்திகேயன் உடன் தொடர்ந்து இரண்டு படங்களில் ஜோடியாக நடித்த பிரியங்கா அருள் மோகனிடம் கேட்டிருக்கின்றனர். ஆனால் அவர் முடியாது என சொல்லிவிட்டதாக தெரிகிறது. அதுவும் அதற்கு அவர் சொன்ன காரணம் தான் முக்கியம்.
தான் சம்பளத்தை அதிகரிக்க உள்ளதால் தற்போதைக்கு எந்த படத்திலும் ஒப்பந்தம் செய்ய விரும்பவில்லை என கூறியதாக டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
அவரை தமிழில் அறிமுகப்படுத்திய சிவகார்திகேயனுக்கே இந்த பதிலா?