அஜித்துக்கு ஜோடியாக 22 வயது நடிகையா, ரசிகர்கள் ஷாக்
அஜித் இந்த வருடம் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படத்தில் நடித்துவிட்டார். இதை தொடர்ந்து அவர் கவனம் முழுவதுமே கார் ரேஸில் தான் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அஜித் அடுத்து மீண்டும் ஆதிக் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார் என்பதே நாம் அனைவரும் அறிந்தது. இப்படத்தின் செட் ஒர்க், ப்ரீ புரொடக்சன்ஸ் ஒர்க் எல்லாம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கவுள்ளார், அதனால் தான் மலேசியாவில் அஜித்தின் கார் ரேஸை அவர் பார்க்க வந்தார் என கூறப்பட்டது. ஆம், அது உண்மை தான் அவர் இந்த படத்தில் நடிக்கிறார், ஒரு வேளை ஜோடி இல்லாமல் முக்கிய கதாபாத்திரமாக இருக்கலாம் அல்லது இளம் வயது அஜித்துக்கு ஜோடியாக இருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.

இவர் மட்டுமின்றி இப்படத்தில் நடிகை ரெஜினாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.