அவரு வாங்குன அதே மூச்சு.. விஜய்யை காப்பி அடித்தாரா முதலமைச்சர்?

Vijay Dravida Munnetra Kazhagam M K Stalin
By Parthiban.A Feb 07, 2026 03:27 PM GMT
Report

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியபிறகு பிரம்மாண்டமாக பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார். கரூரில் அவரது அரசியல் பிரச்சாரத்தை பார்க்க வந்த போது ஏற்பட்ட அசம்பாவிதத்தில் 41 பேர் உயிரிழந்த பிறகு விஜய் பேரணி நடத்துவதை நிறுத்திவிட்டார்.

வீட்டை விட்டு வெளியே வாங்க விஜய் என பலரும் கலாய்க்கிறார்கள்.

30 நாள் முன் அனுமதி வாங்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதால் விஜய் இனி பொது கூட்டங்கள் நடத்துவதும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

அவரு வாங்குன அதே மூச்சு.. விஜய்யை காப்பி அடித்தாரா முதலமைச்சர்? | Did Stalin Copy Vijay Netizens Comment

காப்பி அடித்தாரா ஸ்டாலின்?

இந்நிலையில் இன்று திமுக நடத்திய மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்த விஷயம் வைரலாகி இருக்கிறது.

விஜய் செய்வது போல மாநாட்டின் நடுவில் போட்டு இருக்கும் ரெட் கார்பெட் ரேம்ப்பில் நடந்து வந்திருக்கிறார் முதலமைச்சர்.

"அவரு வாங்குன அதே மூச்சு.. அதான டா.." என சச்சின் படத்தில் வரும் வசனத்தை குறிப்பிட்டு அந்த வீடியோ அந்த வீடியோவை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.