படுதோல்வியடைந்த ரஜினிகாந்த்.. பார்ட்டி வைத்து கொண்டாடிய விஜய்.. உண்மை என்ன தெரியுமா

Rajinikanth Vijay
By Kathick Nov 19, 2022 11:00 AM GMT
Kathick

Kathick

Report

பாபா படுதோல்வி

ரஜினி நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாபா. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் படுதோல்வியடைந்தது. ரஜினியின் இந்த மாபெரும் தோல்வியை, நடிகர் விஜய் பார்ட்டி வைத்து கொண்டாடியதாக சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது.

பார்ட்டி வைத்த விஜய்?

இந்நிலையில், இது உண்மையா? இல்லை வெறும் வதந்தி தானா என்பது குறித்து நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லக்ஷ்மணன் பேசியுள்ளார். அவர் கூறுகையில் ரஜினியின் தோல்விக்கு விஜய் பார்ட்டி வைத்து கொண்டாடியது முற்றிலுமாக பொய்யான தகவல் என்று கூறியுள்ளார்.

மேலும், விஜய் ஒரு ரஜினி ரசிகர் என்பதையும், இப்படியெல்லாம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் சித்ரா லக்ஷ்மணன் கூறியுள்ளார். இதன்முலம் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.