கூகுளில் கல்யாணம்! GPAY-யில் மொய்! யாருப்பா அந்த ஜோடி..

lovers westbengal digitalmarriage
By Edward Jan 19, 2022 09:18 AM GMT
Report

வங்கதேசத்தை சேர்ந்த ஒரு இளைஞருக்கு பல மாதங்களாக திருமணம் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளார். இடையில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வருவகிறது.

இதனால் வரும் 24 ஆம் தேதி நடைபெறும் திருமணத்தை 200 பேர் மட்டுமே திருமண நிகழ்வுகளுக்கு அனுமதிக்கப்படும் என்ற செய்தியால் தம்பதிகள் திருமணத்தை டிஜிட்டல் மூலம் நடத்தலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

சமீபத்தில் மணமகனுக்கு தொற்று பரவியிருந்ததால் தங்கள் உறவினர்களுக்கும் அது பரவாமல் தடுக்க, கூகுள் மீட் மூலம் திருமணத்தை பார்க்கலாம். கலந்து கொள்ளும் அனைவருக்கும் சொமோட்டோ மூலம் உணவினை டெலிவரி செய்யவும் உள்ளார்கள்.

பரிசு வழங்க பிளிப்கார்ட் மூலம் ஆர்டர் செய்யவும் மொய் பணமாக ஜிபே மூலம் பணத்தை செலுத்தலாம் என்று கூறியுள்ளனர். இதற்கு அவர்களின் பெற்றோர் சந்தேகத்துடன் பார்த்தாலும் அதற்கான குழுக்களை நிறுவி கண்காணிக்கவும் செய்யவிருப்பதாக கூறியுள்ளனர் தம்பதிகள்.