நம்பர் 1-ன்னு சொல்றதுக்கு தில் ராஜு யாரு!! எங்களுக்கு தெரியாதா.. கடுப்பாகி பேசிய திருப்பூர் சுப்ரமணியம்..

Ajith Kumar Vijay Dil Raju Varisu Thunivu
By Edward Dec 16, 2022 04:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பாஸ் ஆபிஸ் கிங் என்று புகழப்படும் நடிகராகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.

ஜனவரி 12 ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் ஒரு பேட்டிக்கொடுத்து பேசியுள்ளார்.

நம்பர் 1-ன்னு சொல்றதுக்கு தில் ராஜு யாரு!! எங்களுக்கு தெரியாதா.. கடுப்பாகி பேசிய திருப்பூர் சுப்ரமணியம்.. | Dil Raju Speak About Vijay No1 Tirupur Subramaniam

அதில் அஜித்தை விட விஜய் தான் டாப் 1 இடத்தில் இருக்கிறார். அதனால் உதயநிதி ஸ்டாலின் வாரிசு படத்திற்கு தான் தியேட்டர்களை அதிகமாக ஒதுக்க வேண்டும் என்று கூறியது தமிழ் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

இதை கேள்விப்பட்ட பிரபல திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தில் ராஜுவை கண்டபடி திட்டி தீர்த்துள்ளார். நம்பர் 1-ன்னு சொல்றதுக்கு தில் ராஜு யாரு!! எங்களுக்கு தெரியாதா, தெலுங்கு தயாரிப்பாளர் இப்படியேன் பேசி அஜித், விஜய் ரசிகர்களிடையே சண்டையை கிளப்ப வேண்டும் என்று கேட்டுள்ளார்.

மேலும், இன்னும் துணிவு, வாரிசு படத்திற்கான தியேட்டர்கள் ஒதுக்கப்படவில்லை. அப்படி எப்படி உதயநிதியிடம் வாரிசுக்கு தியேட்டர் கேட்டு பார்க்க வேண்டும் என்று கூறுவார் என பயங்கரமாக பேசியுள்ளார்.