ஆண்ட்ரியாவின் அது போன்ற புகைப்படங்கள்!! தாய்மை உணர்வோடு.. இயக்குநர் பரபரப்பு தகவல்
மிஸ்கின்
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் மிஸ்கின். கடந்த வாரம் பாட்டில் ராதா படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மிஸ்கின் கெட்ட வார்த்தைகள் பேசியது, பெரும் சர்ச்சையாக மாறியது.
பலரும் இதனை கண்டித்து பேசினார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற பேட் கேர்ள் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மிஸ்கின் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பரபரப்பு தகவல்
அதில், "பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியாவை நிர்வாணமாக நடிக்க வைக்க முடிவு செய்தேன். அதற்கான ஃபோட்டோ ஷூட் நடத்த நான் என் உதவி இயக்குநரை அனுப்பி வைத்தேன்.
அந்த ஷூட் நடைபெறும் போது நான் வெளியே வந்து சிகரெட் பிடித்துவிட்டு என் ஆஃபிஸுக்கு வந்துவிட்டேன்.
பின் ஆண்ட்ரியாவை போன் மூலம் அழைத்து அவரிடம், உனது நிர்வாண போஸை நான் படத்தின் போஸ்டரில் வைத்தால் எல்லோரும் என்னை போல் அந்த நிர்வாண புகைப்படங்களை இலக்கிய நயத்தோடும், தாய்மை உணர்வோடும் பார்ப்பார்களா என்று தெரியாது.
கண்டிப்பாக பலர் அந்த புகைப்படங்களை விமர்சிப்பார்கள். அதனால் இது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அந்த நிர்வாண போஸை பயன்படுத்தியிருந்தால் படத்துக்கு கூட்டமும் வந்திருக்கும், படமும் ரிலீஸாகியிருக்கும். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. அது தான் என் குணம்" என்று கூறியுள்ளார்.