இயக்குநர் போர் அடித்துவிட்டார்! வாரிசு நடிகருடன் ரகசிய தொடர்பில் இருக்கும் காந்த கண்ணழகி நடிகை!

siva vishal Anu Emmanuel thupparivaalan
By Jon Apr 05, 2021 06:04 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் விஷாலின் துப்பறிவாளன் படத்தின் மூலம் அமெரிக்க நடிகையாக அறிமுகமானவர் நடிகை அனு இம்மானுவேல். மலையாளம் பேசும் நடிகையாக குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து வந்த அனு, நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு மாப்பிள்ளை படத்தின் மூலம் பிரபலமானார்.

இப்படத்தின் மூலம் காந்த கண்ணழகி என்ற பெயரை பிடித்து தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபல இயக்குநர் மீது காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இதை கூறிய சில மாதங்களில் அவரை கழட்டிவிட்டு தற்போது தெலுங்கு நடிகர் ஒருவருடன் ரகசியமாக தொடர்பில் அதுவும் க்ளோசாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அந்த நடிகர் வேற யாருமில்லை தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் தானாம். சமீபத்தில் இருவரும் நெருக்கமாகவும் வெளிநாட்டில் ஊர்சுற்று புகைப்படங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.