திரிஷாவை அனுப்பாத தயாரிப்பாளருடன் மோதிய பிரபல இயக்குநர்!! அதுவும் சூர்யாவுக்காகவா?
இயக்குநர் அமீர்
நடிகர் சூர்யாவிற்கு மிகப்பெரிய படமாக அமைந்தது தான் 2002ல் வெளியான மெளனம் பேசியதே படம். இயக்குநர் அமீர் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடித்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் போது தயாரிப்பாளருடன் மோதிய அனுபவத்தை இயக்குநர் அமீர் மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
அதில், ஒரு நாள் ஈசிஆரில் மெளனம் பேசியதே படத்தின் ஷூட்டிங் நடந்துக்கொண்டிருந்தது. அன்று சூர்யா - திரிஷா காம்பினேஷனில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம்.

அந்நேரத்தில் திரிஷா தெலுங்கில் ஒரு பெரிய படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த படத்தை ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. அப்போது மெளனம் பேசியதே படத்தின் தயாரிப்பாளர் போன் செய்து தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கிற்கு திரிஷா போக வேண்டும், அதனால் 4 மணிக்கு திரிஷாவை விட்டுவிடுங்கள் என்று சொன்னார். நான் அதை மைண்டில் ஏற்றிக்கொள்ளவே இல்லை. எனக்கு தேவையான ஷார்ஸ் வேண்டும் என்று எடுத்துக் கொண்டிருந்தேன்.
அப்போது திரிஷா, நான் போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். நான் 9 - 5 நாட்களுக்கு காட்சி இருக்கு, 6 மணிக்கு நான் உங்களை விட்டுவிடுகிறேன் என்றேன். அதற்கு திரிஷா நான் 6 மணிக்கு விமான நிலையத்தில் இருக்கவேண்டும் என்றார். அது என் பிரச்சனை இல்லை, எனக்கு தேவையான காட்சிகளை நான் எடுத்துவிடுகிறேன் என்றேன். ஒருக்கட்டத்தில் திரிஷா அமைதியாகிவிட்டார் புரோடக்ஷன் சைடில் இருந்து எனக்கு பிரசர் வந்துக்கொண்டே இருந்தது.

எக்ஸிகியூட்டிவ் பிரொடியூசர் பிரசர் போட்டுக்கொண்டே இருந்தார். அப்போது அவர் திரிஷா, ஹைதராபாத்திற்கு செல்ல வேண்டும் தயாரிப்பாளர் ரத்னம் எனக்கு போன் செய்து கொண்டே இருக்கிறார் என்று கூறினார். உடனே நான் ரத்னம் சாருக்கு போன் செய்தால், நீங்க ஏன் கவலைப்படுகிறீர்கள், எனக்கு டேட் இருக்கு நான் சீனை இன்னும் முடிக்கவில்லை சீனை முடித்தால் தானே அனுப்ப முடியும் என்றேன்.
காட்சிகள் எல்லாம் முடிந்து திரிஷா 5.30 மணிக்கு தான் சென்றார், தாமதமாக சென்றதால் திரிஷா விமானத்தை மிஸ் பண்ணிவிட்டார். அப்போது மெளனம் பேசியதே படத்தின் தயாரிப்பாளர் போன் செய்து பாய் நீங்க சரியில்லை, படம் ஆரம்பிக்கும் போது ஒரு நட்பு இருந்தது, இப்போது நான் தயாரிப்பாளர் சொல்லியும் நீங்க ஹீரோயினை அனுப்பவில்லை என்று சொல்லிவிட்டு கொஞ்ச நாள் என்னிடம் பேசவில்லை என்று அமீர் தெரிவித்துள்ளார்.